நிலையில்லா உலகம் இது நினைவினில் எழுதி விடு - Nilaiyillaa ulagam ithu ninaivinil eluthi vidu

நிலையில்லா உலகம் இது நினைவினில் எழுதி விடு

நிலையான நகரம் உண்டு நித்திய சந்தோஷம் நமக்கு உண்டு

நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?

இயேசுவை சந்திப்பாயா?

மலரை போன்ற மனித வாழ்வு உலர்ந்து வாடிடுமே

மனதில் தோன்றும் வழியினில் சென்று

வேதனை அடையாதே

பாவத்தின் சம்பளம் மரணம் என்று நீ அறியாமல் வாழுவதேன்

பரிசுத்த தேவனின் கரங்களில் வந்தால் பாக்கியம் நிச்சயமே

நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?

இயேசுவை சந்திப்பாயா?

நிழலை போன்ற உலகின் வாழ்வு கடந்து போய் விடுமே

நிஜங்கள் என்ன என்பதை அறிந்து வாழ்ந்திட அவசியமே

வல்லவர் இயேசுவின் வருகை ஒரு நாள்

விரைவினில் வந்திடுமே

மனதினில் அவரை ஏற்றவர் மட்டும் மறுரூபம் அடைவாரே

நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?

இயேசுவை சந்திப்பாயா?

நிலையில்லா உலகம் இது நினைவினில் எழுதி விடு - Nilaiyillaa ulagam ithu ninaivinil eluthi vidu

Nilaiyillaa ulagam ithu ninaivinil eluthi vidu

nilaiyaana nakaram unndu niththiya santhosham namakku unndu

neeyum sinthippaayaa? neeyum sinthippaayaa?

Yesuvai santhippaayaa?

Malarai pontra manitha vaalvu ularnthu vaadidumae

manathil thondrum valiyinil sentru

vaethanai ataiyaathae

paavaththin sampalam maranam entru nee ariyaamal vaaluvathaen

parisuththa thaevanin karangalil vanthaal paakkiyam nichchayamae

neeyum sinthippaayaa? neeyum sinthippaayaa?

Yesuvai santhippaayaa?

Ninilalai pontra ulakin vaalvu kadanthu poy vidumae

nijangal enna enpathai arinthu vaalnthida avasiyamae

vallavar Yesuvin varukai oru naal

viraivinil vanthidumae

manathinil avarai aettravar mattum maruroopam ataivaarae

neeyum sinthippaayaa? neeyum sinthippaayaa?

Yesuvai santhippaayaa?